மதுரையில் இருந்து திருமங்கலத்துக்கு இரவு நேரங்களில் போதிய டவுன் பஸ்கள் இல்லை


மதுரையில் இருந்து திருமங்கலத்துக்கு இரவு நேரங்களில் போதிய டவுன் பஸ்கள் இல்லை
x

மதுைரயில் இருந்து திருமங்கலம் நகருக்கு இரவு நேரங்களில் போதிய டவுன்பஸ்கள் இல்லை. இதனால் பெரியார் பஸ் நிலையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.

மதுரை

மதுரையில் இருந்து திருமங்கலம் நகருக்கு இரவு நேரங்களில் போதிய டவுன்பஸ்கள் இல்லை. இதனால் பெரியார் பஸ் நிலையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.

இரவு நேர பஸ் சேவை

மதுரையில் இருந்து திருமங்கலம் நகருக்கு மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வழியாக இரவு நேர பஸ் சேவை இருந்தது. அதன்படி, திருமங்கலம் பகுதியில் குடியிருக்கும் மதுரையில் வேலைபார்த்து வரும் பணியாளர்கள், தென்மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு பொருட்கள் வாங்க வரும் மொத்த வியாபாரிகள், உள்ளூர் வணிகர்கள் ஆகியோருக்கு இந்த இரவு நேர பஸ் சேவை வசதியாக இருந்து வந்தது.

இதற்கிடையே, மதுரையில் இருந்து இயக்கப்படும் இரவு பஸ்சேவை 10.30 மணிக்கு மேல் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நள்ளிரவு நேரங்களில் சுமார் 2 மணி நேரம் வரை பெரியார் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வருவாய் இழப்பு

இது குறித்து போக்குவரத்துக்கழகம் தரப்பில் கூறும்போது, தென்மாவட்டங்களில் இருந்து மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் செல்லும் வெளியூர் பஸ்கள் திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் மற்றும் ஆரப்பாளையம் வழியாக செல்கின்றன. இதனால், மதுரைக்கு டவுன் பஸ்சில் செல்லும் பயணிகள் அனைவரும் வெளியூர் பஸ்களில் வந்துவிடுகின்றனர். திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி புறப்படும் டவுன் பஸ்கள் பயணிகள் இல்லாமல் காலியாக இயக்கப்படுகிறது. இதனால், போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பஸ்களை அதிகரிக்க வேண்டும்

திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பணி முடித்து இரவு வீட்டுக்கு செல்ல இரவு நேர பஸ் சேவை வசதி இருந்தது. 15 நிமிடங்களுக்கு ஒரு பஸ் என சுமார் 15 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. கொரோனா ஊரடங்குக்கு பின்னர் இந்த சேவை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது தீபாவளி நேரம் என்பதால், கடைகள், வணிக நிறுவனங்களில் பணி முடிய காலதாமதம் ஆகிறது. ஆனால், இரவு நேர பஸ் இல்லாததால் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை வரை மட்டுமாவது இரவு பஸ்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


Related Tags :
Next Story