வருகிற 3-ந் தேதி முதல்சித்தோடு ஆவின் ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு


வருகிற 3-ந் தேதி முதல்சித்தோடு ஆவின் ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
x

சித்தோடு ஆவின் ஆலை முன்பு வருகிற 3-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு

சித்தோடு ஆவின் ஆலை முன்பு வருகிற 3-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை நிர்ணயம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் முருகசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், புண்ணாக்கு, தவிடு, தீவனங்களின் விலை மற்றும் ஆட்கள் கூலி கடுமையாக உயர்ந்துள்ளன. ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது. ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுக்கான உற்பத்தி செலவை, அரசே மானியமாக வழங்குகிறது.

இவ்வாறான கட்டமைப்பு இங்கு இல்லாததால், விவசாயிகளும், ஆவின் நிறுவனமும் நலிந்து வருகிறோம். எனவே, பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமை பால் லிட்டருக்கு ரூ.51-ம் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

காத்திருப்பு போராட்டம்

நலிந்து வரும் ஆவின் நிறுவனத்தை சீரமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க செயலர்களை பணிவரன்முறை செய்து, உரிய சம்பளம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி காலை 10 மணி முதல் சித்தோட்டில் உள்ள ஆவின் ஆலை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.


Related Tags :
Next Story