ஒட்டாண்குளத்தில் இருந்துமுதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு


ஒட்டாண்குளத்தில் இருந்துமுதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டாண்குளத்தில் இருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

தேனி

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையில் சுரங்கனார் நீர் வீழ்ச்சி உள்ளது. மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த தண்ணீர் ஒட்டாண்குளம் என்று அழைக்கப்படும் மைத்தலை மண்ணடியான் குளத்தில் வந்து சேருகிறது. இதன் மூலம் ஒட்டாண்குளம், ஈஸ்வரன் கோவில் புலம், பாரவந்தான், ஒழுகு வழிச்சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது ஒட்டாண் குளத்திற்கு தண்ணீர் வரும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்திற்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்த குளத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டுவரப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது . முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் மட்டுமே குளத்திற்கு வந்து சேருகிறது. தற்போது குளம் நிரம்பி வருவதால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சுரங்கனார் நீர் வீழ்ச்சி அருகே புதிய தடுப்பனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story