கர்நாடக வனப்பகுதியில் இருந்துதமிழக வனப்பகுதிக்கு படையெடுக்கும் யானைகள் கூட்டம்


கர்நாடக வனப்பகுதியில் இருந்துதமிழக வனப்பகுதிக்கு படையெடுக்கும் யானைகள் கூட்டம்
x

கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு யானைகள் படையெடுத்து வருகிறது.

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. தாளவாடி அருகே ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்டது அருள்வாடி கிராமம். இது தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை கர்நாடக வனப்பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறின. பின்னர் அவை தமிழக வனப்பகுதியை ஒட்டி உள்ள அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் புகுந்தது. அதன்பின்னர் நிலத்தில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனர்.

இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கூறும்போது, 'கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி இருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்தி உள்ளனர். தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.


Next Story