தேனியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு ரெயில் இயக்க வேண்டும்


தேனியில் இருந்து  சென்னை, பெங்களூருவுக்கு ரெயில் இயக்க வேண்டும்
x

தேனியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் தேனி எம்.பி.ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்தார்

தேனி

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி எம்.பி.யும், அ.தி.மு.க. மக்களவை குழு தலைவருமான ப.ரவீந்திரநாத், டெல்லியில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து, மதுரையில் இருந்து தேனிக்கு ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 26-ந்தேதி தொடங்கி வைத்ததற்கு தேனி நாடாளுமன்ற பொதுமக்களின் சார்பில் நன்றி தெரிவித்தார். அப்போது, மதுரை-போடி ரெயில் பாதையை மின்மயமாக்கவும், தேனி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தேனியில் இருந்து சென்னை, சேலம், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விரைவு ரெயில்கள் இயக்கவும், திண்டுக்கல்-லோயர்கேம்ப் இடையிலான புதிய ரெயில்பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து திட்டத்தை உடனடியாக ரெயில்வே துறை செயல்படுத்த வேண்டும் என்றும் 3 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story