திருவாரூரில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் ஈரோடு வந்தது
திருவாரூரில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் ஈரோடு வந்தது.
ஈரோடு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட தேவைக்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயிலில் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சரக்கு ரெயில் நேற்று ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொதுவினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story