தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குரெயிலில் 931 டன் உரம் வந்தது


தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குரெயிலில் 931 டன் உரம் வந்தது
x

தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 931 டன் உரம் ரெயிலில் வந்தது.

ஈரோடு

தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 931 டன் உரம் ரெயிலில் வந்தது.

931 டன் உரம்

ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். எனவே ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் கிடைக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு ஸ்பிக் நிறுவனத்தின் 637 டன் யூரியா, 130 டன் டி.ஏ.பி., 155 டன் காம்ப்ளக்ஸ், 9 டன் சூப்பர் பாஸ்பேட் என மொத்தம் 931 டன் உரம் ரெயிலில் வந்தது. இந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.

மண் பரிசோதனை

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கு வசதியாக 5 ஆயிரத்து 444 டன் யூரியா உரம், 2 ஆயிரத்து 688 டன் டி.ஏ.பி. உரம், 1,308 டன் பொட்டாஷ் உரம், 10 ஆயிரம் டன் காம்ப்ளக்ஸ் உரம், 903 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்தலாம். மேலும், திண்டலில் உள்ள வேளாண்மைத்துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படும் உரங்களை பயன்படுத்தி உரச்செலவை குறைக்கலாம்.

இவ்வாறு இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறினார்.

இந்த ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குனர் வைத்தீஸ்வரன், வேளாண்மை அதிகாரி ஜெயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story