தூத்துக்குடியில் இருந்துஇலங்கைக்கு கடத்த முயன்ற 1500 லிட்டர் டீசல் பறிமுதல்


தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1500 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1500 லிட்டர் மண்ணெண்ணெய் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

கண்காணிப்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி இனிகோநகர் பகுதியில் இருந்து மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பதிவு செய்யப்படாத 2 பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மண்ணெண்ணெய் பறிமுதல்

அந்த படகுகளில் 24 கேன்களில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக போலீசார் அந்த மண்ணெண்ணெய் கேன்களை பறிமுதல் செய்தனர். இதில் சுமார் 1500 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் 2 படகு மற்றும் 1500 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இனிகோநகரை சேர்ந்த ஜார்ஜ் (வயது 22), பட்டுராஜ் (35) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மண்ணெண்ணையை இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அதே போன்று கடலுக்குள் வைத்து வேறு படகுகளுக்கு விற்பனை செய்வதற்காகவும் வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதனால் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story