பகவதி அம்மன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி


பகவதி அம்மன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி
x

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

தமிழ் புத்தாண்டான சித்திரை 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் சித்திரை விஷூ பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீடுகளிலும், கோவில்களிலும் கனி காணல் நிகழ்ச்சியும், கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக பழங்கள், காய்கறிகள், நாணயங்கள் போன்றவற்றை கைநீட்டமாக வழங்குவதும் வழக்கம். அந்த வகையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சித்திரை விஷூ கனி காணல் மற்றும் கைநீட்டம் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் தீபாராதனை முடிந்ததும் பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்பட்டது. பின்னர் மதியம் 1 மணிக்கு உச்ச பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story