தூக்குப்போட்டு பழவியாபாரி தற்கொலை
மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு பழவியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு பழவியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
பழ வியாபாரி
மயிலாடுதுறை திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் மணிகண்டன் (வயது 28). பழ வியாபாரி. இவர் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே மேட்டு தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். மணிகண்டன் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மணிகண்டன் தனது மனைவியிடம் பணம் வாங்கி கொண்டு வெளியே சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த மணிகண்டன் தனது மனைவியை அடித்து உதைத்து விட்டு வீட்டிற்கு உள்ளே சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.
தூக்கில் ெதாங்கினார்
அவர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது மணிகண்டன் வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையால் போடப்பட்ட தூக்கில் தொங்கி உள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.