பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு பழங்கள் படையல்
ஆனிமாத பவுர்ணமியைெயாட்டி பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு பழங்கள் படையல் படைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாளில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜையும், சர்வ அலங்காரமும் நடந்து வருகிறது. அதேபோல நேற்று ஆனி மாத பவுர்ணமியையொட்டி சிவபெருமானுக்கு முக்கனிகளான மா, பலா, வாழை பழங்கள் குவியல், குவியலாக படைக்கப்பட்டது. மேலும் கூடுதலாக ஆந்திரா நவாப்பழமும் நம் ஊர் திராட்சைபழங்களும் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவபெருமானுக்கும், அவரது வாகனமான நந்திக்கும் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு மகா தீப, தூப ஆராதனை நடந்தது. அவை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பால் சுனை கண்ட சிவபெருமானை வழிபட்டனர். பவுர்ணமி யையொட்டி கிரிவலம் வந்த பக்தர்களுக்கு சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட முக்கனிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.