சினிமா இயக்குனராக முடியவில்லையே என்ற விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை திட்டக்குடி அருகே பரிதாபம்


சினிமா இயக்குனராக முடியவில்லையே என்ற விரக்தியில்  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை  திட்டக்குடி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே சினிமா இயக்குனராக முடியவில்லையே என்ற விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்


ராமநத்தம்,

திட்டக்குடி அருகே கீழ்செருவாய் வெள்ளாறு கரை ஓரமாக தடுப்பணையில் உள்ள புளிய மரத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று காலை பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கியவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூரை சேர்ந்த ராம்ராஜ் மகன் பாலாஜி(வயது 34) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சினிமாவில் கதை எழுதி படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்துள்ளார். ஆனால் அவரால் இயக்குனர் ஆக முடியவில்லை என தெரிகிறது.

விரக்தி

இதனால் அவர் கடந்த சில நாட்களாக கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கீழ்செருவாய் வெள்ளாற்று தடுப்பணையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story