நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்க முழு ஒத்துழைப்பு


நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்க முழு ஒத்துழைப்பு
x

தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்க முழு ஒத்துைழப்பு அளித்து வரும் அரசுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பாராட்டு தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்க முழு ஒத்துைழப்பு அளித்து வரும் அரசுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பாராட்டு தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமை தாங்கினார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், வி.பவானி சுப்பராயன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசியதாவது:- தமிழகத்தில் நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்குவதற்கு தமிழக அரசு தேவையான முழு ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

இதற்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நீதித்துறையின் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளுக்கு, அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு, தேவையான நிலங்களை நீதித்துறைக்கு ஒப்படைப்பு செய்வது தொடர்பாக நிலுவை இனங்களை தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். கூட்டத்தில் மாவட்ட நீதிபதி பி.முருகன், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் ஆர்.ஸ்ரீதரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம், தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன், மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story