முழுமையாக வேலை கிடைக்க நடவடிக்கை


முழுமையாக வேலை கிடைக்க நடவடிக்கை
x

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு முழுமையாக வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர்

ராஜபாளையம்.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு முழுமையாக வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. நகரத்தலைவர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார்.

இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் சக்தி மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை இந்திய அளவில் பொதுமக்களை மிகவும் பாதித்தது. கர்நாடக தேர்தல் தோல்விக்கு பின்னர் பெட்ரோல் விலையை குறைக்கும் நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கு ரூ. 500 மானியம் கொடுக்கிறது. எனவே மத்திய அரசு சிலிண்டருக்கு ரூ.500 விலை குறைக்க முடியும். குறைக்க வேண்டும் என்பது கோரிக்கை.

நாடாளுமன்ற தேர்தல்

100 நாள் ேவலை திட்ட பணியாளர்களுக்கு முழுமையாக வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக தேசிய தலைமை யாரை நியமனம் செய்தாலும் அவரை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் இணைந்துள்ள வெற்றி கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலையரங்கம் திறப்பு

ராஜபாளையம் அருகே கிழவி குளம் கிராமத்தில் விருதுநகர் தொகுதி எம்.பி. நிதியிலிருந்து கட்டப்பட்ட கலையரங்கத்தை மாணிக்கம்தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.

சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயங்களை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கினார். பின்னர் வடகரை கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளரிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.


Next Story