முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை நடந்தது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் நேற்று மார்கழி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். 6 மணிக்கு பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மனுக்கு 21 வகையான அபிஷேகமும், கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன், பேச்சியம்மனுக்கு பால் அபிஷேமுகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடினர். பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story