சிவன்மலையில் பவுர்ணமி வழிபாடு


சிவன்மலையில் பவுர்ணமி வழிபாடு
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவன்மலையில் பவுர்ணமி வழிபாடு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே நம்பாலக்கோட்டையில் உள்ள சிவன் மலையில் நேற்று முன் தினம் பவுர்ணமி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து பகல் 11 மணிக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மாலை 4 மணிக்கு சிவன்மலையை பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 5.30 மணிக்கு சிவலிங்கம் நந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story