யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு


யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் நடந்த பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story