கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது
கலுங்கப்பட்டியில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
சிவகங்கை
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரியூர் ஊராட்சியில் உள்ளது கலுங்குபட்டி கிராமம். இந்த பகுதியில் உள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து வருகின்ற தண்ணீர் மேலூர், கீழவளவு, எருமைப்பட்டி, ஒப்பிலான்பட்டி வழியாக ஏரியூர் கலுங்குபட்டி அணைக்கு வந்தடையும். அங்கிருந்து திருப்பத்தூர் தாலுகா திருக்கோஷ்டியூர் வழியாக ராமநாதபுரம் சென்றடையும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர் கலுங்குபட்டி கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பரளவில் உள்ள கண்மாய்க்கு வந்தது. இதன் காரணமாக தற்போது கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதன் காரணமாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Full of eyes
Related Tags :
Next Story