தமிழகத்தில் 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்ட ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு


தமிழகத்தில் 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்ட ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 3 Sept 2023 8:57 AM IST (Updated: 3 Sept 2023 2:13 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1,000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-24-ம்ஆண்டில் 1,500 பழங்குடியினர்களுக்கு தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 1,500 வீடுகளை விரைந்து கட்டி முடிக்கத் தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story