தீவனப்புல் வளர்க்க தாட்கோ மூலம் நிதி


தீவனப்புல் வளர்க்க தாட்கோ மூலம் நிதி
x

கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க தாட்கோ மூலம் நிதி வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத்தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வாங்குவதற்கு 1 நபருக்கு ரூ.10 ஆயிரம் (ஒரு ஏக்கருக்கு) வழங்க அரசாணை வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18-க்குமேல் 65-க்குள் இருகக் வேண்டும். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பத்தூர் மாவட்டம் என்ற முகவரில் தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயனடையலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story