தி.மு.க. மகளிர் அணி சார்பில் 50 மகளிருக்கு நிதியுதவி வழங்கும் விழா
தி.மு.க. மகளிர் அணி சார்பில் 50 மகளிருக்கு நிதியுதவி வழங்கும் விழா
நல்லம்பள்ளி:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி தர்மபுரி மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில், கணவனை இழந்த மகளிர் 50 மகளிருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மா.குட்டூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். மகளிர் அணி நிர்வாகிகள் கண்ணம்மாள், ராதா, ரேணுகா, ஜோதிமணி, சரஸ்வதி, கிருஷ்ணவேணி, கிருஷ்ணம்மாள், கீர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பங்கேற்று 50 மகளிருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.2.50 லட்சம் நிதியுதவியை வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, கிளை செயலாளர்கள் சேகர், பாளைஅன்பு, சித்தன், கணேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், நார்த்தம்பட்டிஊராட்சி தலைவர் கலைச்செல்வன், நிர்வாகிகள் சரவணன், சிவக்குமார், ராமன் பொன்னுசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.