அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும்


அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும்
x

அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் குடவாசல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்

குடவாசல்:

அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் குடவாசல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

குடவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கமலா கூட்ட அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

பஸ் இயக்க வேண்டும்

மகேந்திரன் (அ.தி.மு.க.):- உள்ளாட்சித்தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளாகியும், ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காத நிலையில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ஒவ்வொரு உறுப்பினருக்கும் நிதி ஒதுக்க வேண்டும்.

கோபி (ம.தி.மு.க.):-குடவாசல் முதல் மயிலாடுதுறை வரை எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழியாக அரசு பஸ் சென்று வந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் குடவாசல் சென்று வர வசதியாக இருந்தது. இந்த பஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த பஸ் இயக்க வேண்டும்.

கூட்டத்தை புறக்கணிக்கப்போம்

தியாகராஜன் (த.மா.கா.):- திருவாரூரில் இருந்து திருவிடைசேரி, வவ்வ லாடி, புதுக்குடி வழியாக ஆடுதுறை வரை இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இந்த பஸ்சை இயக்க வேண்டும்.

அர்ஜூனன் (அதி.மு.க.):- அனைத்து உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டதைப் போல ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு இனிமேலாவது நிதி ஒதுக்க வேண்டும். இதே நிலைக்கு தொடர்ந்தால் வருகிற கூட்டத்தை உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கப்போம்.

கிளாரா செந்தில்(தலைவர்):- குடவாசல் வட்டாரத்தை பொருத்தவரை போதுமான நிதி இல்லாத காரணத்தால் நிதி ஒதுக்கீடு விளங்குவதில் சில சிக்கல்கள் உள்ளது. வரும் காலத்தில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதில் உறுப்பினர்கள் ரமா, மணிகண்டன், தமிழரசி, பிரபாவதி, மஞ்சுளா, உஷாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலா நன்றி கூறினார்.


Next Story