பாகம்பிரியாள் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி


பாகம்பிரியாள் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி
x

தியாகதுருகத்தில் பாகம்பிரியாள் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்;

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையான இன்று கோவிலில் பாகம்பிரியாள் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் உள்ள பாகம்பிரியாள் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையிலான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதில் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கொண்டுவந்த கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், அரிசி சாதம் ஆகியவற்றை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story