சீறி பாய்ந்த இரட்டை மாட்டு வண்டிகள்


சீறி பாய்ந்த இரட்டை மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்தன. இதை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்தன. இதை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

மாட்டு வண்டி பந்தயம்

சாயல்குடி அருகே செவல்பட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என்ற நான்கு பிரிவுகளில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவதாக ஏனாதி ஏடிஎம் என்பவரது மாடும், 2-வதாக கயத்தார் பகுதியைச் சேர்ந்த காந்தி ராஜா என்பவரது மாடும், 3-வதாக வீரக்குடி முருகன் மேலச்செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி என்பவரது மாடும், 4-ம் பரிசை நாகம்பட்டி கண்ணன் காவியா என்பவரது மாடுகளும் பெற்றன.

சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவதாக பூலாங்கால் கிராமத்தைச் சேர்ந்த அனுசுயா என்பவரது மாடும், 2-வது பரிசை சிவஞானபுரம் மந்திரமூர்த்தி என்பவரது மாடும், 3-வது பரிசை சிங்கிலிபட்டி முகுந்தன் என்பவரது மாடும், 4-வது பரிசை நயினார்புரம் சந்தியா சிவானி என்பது மாடுகளும் பெற்றது.

பரிசுகள்

பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவதாக அரசரடி கதிர்வேல் பாண்டியன் என்பவரது மாடும், 2-வது பரிசை சங்கரப்பேரி வெள்ளைச்சாமி என்பவர் மாடும், 3-வது பரிசை அரியநாயகிபுரம், செல்வம் என்பவரது மாடும், 4-வது பரிசை கல்லூரணிசீமான் என்பவரது மாடுகளும் பெற்றன.

பூஞ்சிட்டு 2-வது சுற்றில் முதலாவதாக பாடுவனேந்தல் தேமுத்தி என்பவரது மாடும், 2-ம் பரிசை சிங்கிலிபட்டி முகுந்தன் என்பவரது மாடும், 3-வது பரிசை மேலக்கிடாரம் ஜெனித்தா என்பவரது மாடும், 4-வது பரிசை சிங்கிலிபட்டி சுடலைமணி என்பவரது மாடும் பெற்றது.

தேன் சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக சாயல்குடி செந்தூர் என்பவரது மாடும், 2-வது பரிசை பாடுவனேந்தல் மகாதேவன் என்பவரது மாடும், 3-வது பரிசை பூலாங்கால் அசன் என்பவரது மாடும், 4-வது பரிசை பாடுவனேந்தல் கருப்புசாமி என்பவரது மாடும் பெற்றன. பந்தயத்தில் சீறி பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கைத்தட்டி வரவேற்றனர். அதோடு செல்போனில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செவல்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story