சீறிப்பாய்ந்த குதிரை வண்டிகள்
காரைக்குடி அருகே கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே இலுப்பைக்குடி தெற்கு குடியிருப்பு பகுதியில் உள்ள நொண்டி முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் தெற்கு குடியிருப்பு-மாத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 31 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம், பெரிய குதிரை வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மாத்தூர் பாண்டி வண்டியும், 2-வது பரிசை இலுப்பைக்குடி யுவஸ்ரீ வண்டியும், 3-வது பரிசை பீர்கலைக்காடு அப்துல்ரஜாக் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 3-வது பரிசை ஆலத்துப்பட்டி கூத்தாச்சியம்மன் வண்டியும் பெற்றது.
குதிரை வண்டி பந்தயம்
இறுதியாக நடைபெற்ற பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் 12 குதிரை வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை இலுப்பைக்குடி பாண்டி குதிரையும், 2-வது பரிசை திருச்சி அருண் குதிரையும், 3-வது பரிசை உஞ்சனை தண்ணீர்மலை குதிரையும், 4-வது பரிசை இலால்குடி மகாமாரியம்மன் குதிரையும், 5-வது பரிசை அதே ஊரைச் சேர்ந்த மன்சுரா குதிரையும் பெற்றது. வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.