மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டது.
சேலம்
மேட்டூர்:
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா பாசன பகுதிகளில் பெய்து வருவதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story