விநாயகர் சிலைகளுக்கு கஜபூஜை


விநாயகர் சிலைகளுக்கு கஜபூஜை
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு கஜ பூஜை நடைபெற்றது.

தஞ்சாவூர்
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடந்தது. இந்தஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் விமரிசையாக கொண்டாட இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி கும்பகோணத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் கும்பகோணம் மடத்து தெருவில் அமைக்கப்பட்டுள்ள தலைமை விநாயகருக்கு கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நேற்று காலை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

இதனைத் தொடர்ந்து கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கும்பகோணம் கர்ண கொள்ளை தெருவில் உள்ள சித்தி விநாயகர் செல்வகணபதி கோவிலில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், இந்த அமைப்பின் சார்பில் வீடுகள்தோறும் விநாயகர் சிலைகள் கொடுக்கப்பட்டன.Next Story