தர்மபுரியில் நாளை பெண்களுக்கான விளையாட்டு போட்டி-கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி தர்மபுரி மாவட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தடகள விளையாட்டு பிரிவில் 100, 200, 400மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகள், இறகுப்பந்து விளையாட்டில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள், கபடி, யோகா, கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் அனைத்து வயது பிரிவு பெண்களும் கலந்து கொள்ளலாம். எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story