கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா-பீட்டர்அல்போன்ஸ் பங்கேற்பு


கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா-பீட்டர்அல்போன்ஸ் பங்கேற்பு
x

கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பீட்டர்அல்போன்ஸ் கலந்து கொண்டார்.

வேலூர்

கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பீட்டர்அல்போன்ஸ் கலந்து கொண்டார்.

கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் ஜெயின் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி தலைவர் ப.பியாரேலால் ஜெயின் தலைமை தாங்கினார். விழாவை கல்லூரியின் முதல்வர் மு.பாரதி வழிநடத்தினார். இதில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் 245 பேர் பட்டம் பெற்றனர். சிறப்பு விருந்தினராக மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு அவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ''வரும் நாட்களில் உலகம் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இருக்கும். அதனால் நீங்கள் உங்கள் திறனை நன்கு வளர்ந்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களுக்கு உண்டான எதிர்கால நோக்கம் பற்றி அறிந்து இருத்தல் வேண்டும். பெற்றோர்களின் தியாகத்தை உணர்ந்து கொண்டு அவர்களின் சொல்படி நடக்க வேண்டும்'' என்றார். அப்போது அவர் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும் என்று கூறி டாக்டர் ஐடா ஸ்கடரின் மருத்துவ அர்ப்பணிப்பை மேற்கோள்காட்டி உரையை நிறைவு செய்தார்.மேலும் கல்லூரி தரவரிசைப் பட்டியியலில் இடம் பிடித்தவர்களுக்கு சிறப்பு விருந்தினருடன் கல்லூரி நிர்வாகிகள் பரிசு வழங்கினர்.


Next Story