திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம்
திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது.
திருப்பனந்தாள்:
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று(திங்கட்கிழமை) முதல் யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது.
இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மகாபூர்ணாஹூதியும் தீபாராதனையும் நடந்தது. வருகிற 5-ந் தேதி திருவீதி விநாயகர், தேரடி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், 6-ந்தேதி ஊருடையப்பர் கோவில், விஸ்வநாதர் கோவில்களுக்கும் குடமுழுக்கு நடந்தது. 7-ந்தேதி அருணஜடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடக்கிறது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.