முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா
நீடாமங்கலம் கீழத்தெருவில் உள்ள முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது.
திருவாரூர்
நீடாமங்கலம் கீழத்தெருவில் உள்ள முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முன்னதாக அன்று மாலை சிறப்பு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், காசிவிசுவநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கந்தசஷ்டி விழா தொடங்கியது.
Related Tags :
Next Story