கலெக்டர் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா


கலெக்டர் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் காந்தியின் உருவப்படத்துக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் காந்தியின் உருவப்படத்துக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிறப்பு விற்பனை

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கதர் அங்காடியை கலெக்டர் குத்துவிளக்கு எற்றி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைதத்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

இந்தியாவிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு வாழ்வளிப்பது கதர் நூற்பும், நெசவும் ஆகும். அதுமட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு சோப்பு, ஊதுபத்தி, ஜவ்வாது. மெழுகுவர்த்தி தயாரித்தல், தேன் சேகரித்தல் போன்ற தொழிலக்ளை செய்தும், அதனைச்சார்ந்து உபதொழில்கள் செய்வோருக்கும் கதர் கிராமத் தொழில் வாரியம் ஆதரவு அளித்துவருகிறது.

30 சதவீதம் தள்ளுபடி

கதர் துணி மற்றும் கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவி செய்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு -30 சதவீதமும், உல்லன் ரகத்திற்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளன.

நடப்பு ஆண்டு முதல் மரசெக்கில் உற்பத்தி செய்யப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாரம்பரிய அரிசி வகைகள். சாமை, திணை, குதிரைவாலி, சீரகசம்பா, மாப்பிள்ளை சமப்பா மறறும் மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் போன்ற பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ரூ.1¼ கோடி இலக்கு

இந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் விற்பனை இலக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்களுக்கு சுலப தவணையில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்படுவதால் அரசு அலுவலர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் சிவகுமார், தாசில்தார் சிவப்பிரகாசம, கதர் உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


Next Story