காந்தி ஜெயந்தி, மிலாது நபி அன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
காந்தி ஜெயந்தி, மிலாது நபி அன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, ஆணையர் அறிவுரைப்படி காந்தி ஜெயந்தியான நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை), மிலாது நபியான வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற மதுபான அரசு பார்களை மூட வேண்டும்.
டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாது நபி அன்று அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் கூடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல் பார்களிலும் மது விற்பனை செய்யாமல் மூடி இருக்க வேண்டும். இதை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ அல்லது திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பெயரிலும், எப்.எல்.3, பார் உரிமையாளர்கள் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.