குழந்தைகளுக்கான காந்தியடிகள் நாடாளுமன்றம் தொடக்கம்
குழந்தைகளுக்கான காந்தியடிகள் நாடாளுமன்றம் தொடங்கியது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக்கான காந்தியடிகள் நாடாளுமன்றம் தொடங்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்த்தி தலைமை தாங்கினார். 1098 சைல்டு லைன் குழந்தைகளுக்கான காந்தியடிகள் நாடாளுமன்ற கூட்டத்தில் மாணவ, மாணவிகளின் பிரச்சினைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களுக்கு தீர்வு காணும் வகையில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற சபாநாயகராக அடைக்கலம், பிரதமராக சிவானி, கல்வி மந்திரியாக நந்தினி, சுகாதார மந்திரியாக அழகு ஸ்ரீ, சுற்றுச்சூழல் மந்திரியாக அனுஸ்ரீ, போக்குவரத்து துறை மந்திரிகளாக கார்த்தி, பிரியதர்ஷினி, யோகேஸ்வரன், விளையாட்டு துறை மந்திரியாக ஹரிஹரன், உணவுத்துறை அமைச்சராக நவீன்ராஜ் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நாடாளுமன்ற கூட்டுத்தொடர் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி குழந்தைகளுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் 1098 பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.