உடன்குடியில் கந்தூரி விழா
உடன்குடியில் கந்தூரி விழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி காலன்குடியிருப்பு கொத்துவாபள்ளித்தெரு செய்யிதினா அப்துல்லாஹில் ஹத்தாது ஒளியுள்ளாவின் 237-வது கந்தூரி விழா 4 நாட்கள் நடைபெற்றது.
விழாவில் காதிரியா ஆரம்ப குர்ஆன் மதரஸா 33-வது ஆண்டு நிறைவு விழா ஜமாத் தலைவர் காசிம் தலைமையில் மாணவ-மாணவிகள் அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆலின் ஜஹபர் சாதிக் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். ஜமாத் துணைச்செயலாளர் அசார் வரவேற்று பேசினார். தலைவர் ஹபீப் ரகுமான், துணைச் செயலாளர் பைசர் ரகுமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் உடன்குடி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர் அஸ்ஸாப் கல்லாசி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். கவுரவத் தலைவர் சாகுல்ஹமீது பரிசுகளை வழங்கினார். செயலாளர் சகாபுதீன் நன்றி கூறினார். இந்த விழாவிற்கான ஏற்பாடு கந்தூரி விழாகமிட்டியினர் செய்திருந்தனர்.