விநாயகர் சதுர்த்திவிழா ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்திவிழா ஆலோசனை கூட்டம்
x

ஆறுமுகநேரியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்திவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பொன்ராஜ், காயல்பட்டினம் நகர செயலாளர் சந்தன ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணை தலைவர் கசமுத்து, தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் விக்னேஷ் சரவணன், திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜி. ராமசாமி, செயலாளர் பேச்சிமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஜெகன் நன்றி கூறினார். கூட்டத்தில், வருகிற 29-ந் தேதி ஆறுமுகநேரி பகுதிகளில் விநாயகர் சிலை வைக்கவும், 31-ந்தேதி மற்ற இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. வருகிற செப்.3-ந் தேதி ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், நாசரேத், தலைவன் வடலி ஆகிய பகுதிளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.


Next Story