விநாயகர் சதுர்த்தி விழா கலந்தாய்வு கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா கலந்தாய்வு கூட்டம்
x

விநாயகர் சதுர்த்தி விழா கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கோட்ட அளவிலான விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

இதில் தாசில்தார்கள் லோகநாதன், ஆனந்தராஜ், ராமச்சந்திரன், முத்துமாரி, கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தனஞ்செயன், முகேஷ்ஜெயக்குமார், ப்ரீத்தி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜா, சிவகாசி முருகேசன், இந்து மக்கள் கட்சி சிவா, மாரிச்சாமி, மின்வாரியத்துறை அதிகாரிகள் வெங்கடேசன், முத்துசெல்வன், பாலநாகராஜ், சீனிவாசன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்கள் அப்துல்கபூர், கிருஷ்ணபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலம் கொண்டு செல்லவும் விழா ஏற்பாடு செய்பவர்கள் ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைகளை களிமண்ணால் மட்டும் செய்ய வேண்டும்.

நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு சிலைகளை தயாரிக்கலாம். சிலைகள் 10 அடி உயரத்தில் மட்டும் இருக்க வேண்டும். சிலைகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத இடங்களில் வைக்க வேண்டும். சிலைகள் வைக்கப்பட்ட தேதியில் இருந்து 5 தினங்களுக்குள் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் என்பன உள்பட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை தாசில்தார் அகஸ்தீஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story