இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
அரக்கோணத்தில் இந்து முன்னணி சார்பில் 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அரக்கோணம் பழைய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பழைய பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்ட விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. பிரிவு முன்னாள் பொது செயலாளர் பாபாஸ் பாபு கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இதில் இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ், நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு அரக்கோணம் எஸ்.ஆர்.கேட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சுவால் பேட்டை வழியாக, அண்ணா நகர் பகுதியில் விஜர்சனம் செய்யப்படுவதாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குமார் தெரிவித்தார்.