கடையநல்லூரில் விநாயகர் சிலை ஊர்வலம்


கடையநல்லூரில் விநாயகர் சிலை ஊர்வலம்
x

கடையநல்லூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடையநல்லூர் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் மேலக்கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால் குமார்தாபுரம், அச்சம்பட்டி உள்பட நகர் முழுவதும் 30 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு 3 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று மதியம் அனைத்தும் சிலைகளும் மாவடிக்கால் மந்தை திடலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மேல கடையநல்லூர் சென்றடைந்தது. அங்கு சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தாமரைகுளத்திற்கு எடுத்து சென்று கரைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். நகர விநாயகர் சதுர்த்தி இணை அமைப்பாளர் சீனிவாசன், கிருஷ்ணாபுரம் விநாயகர் சதுர்த்தி அமைப்பாளர் கண்ணன் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில பேச்சாளர் காந்திமதி நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்து இளைஞர் முன்னணி சுதன் நன்றி கூறினார். ஊர்வலத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, பொதுச் செயலாளர் ராமநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி, துணை சூப்பிரண்டுகள் அசோக் (புளியங்குடி), மணிமாறன் (தென்காசி), பொன்னரசு (ஆலங்குளம்), இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார் (கடையநல்லூர்), வேல்கனி (அச்சன்புதூர்), சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story