விராலிமலையில் விநாயகர் சிலை ஊர்வலம்


விராலிமலையில் விநாயகர் சிலை ஊர்வலம்
x

விராலிமலையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலை:

விராலிமலை தாலுகா அகரப்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தனர். அதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விராலிமலை போலீசார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நாள் மட்டும் சிலையை வைத்து கொள்ள அனுமதி அளித்தனர். அதன்படி நேற்று மதியம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரு நாள் வழிபாட்டுக்கு பிறகு இன்று மாலை விநாயகர் சிலையை ஆட்டோவில் ஏற்றி மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று அப்பகுதியில் உள்ள குளத்தில் கரைத்தனர்.


Next Story