ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்


ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
x

ஈரோட்டில் விநாயாகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ஈரோடு

ஈரோட்டில் விநாயாகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி, தங்களது வீடுகளில் பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு பிடித்த கொளுக்கட்டை, சுண்டல், லட்டு போன்றவற்றை படையலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

சிலைகள்

இதனையொட்டி, ஈரோடு மாநகரில் ஆர்.கே.வி. ரோடு, மீனாட்சி சுந்தரனார் ரோடு, நேதாஜி ரோடு, சத்தி ரோடு, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் ½ அடி முதல் 2½ அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வியாபாரிகள் குவித்து வைத்திருந்தனர். இதனை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்களுக்கு பிடித்த சிலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும், விநாயகர் சிலையை வைத்து வழிபட வெள்ளை மற்றும் கலர் எருக்கம் பூ மாலைகள், பத்ரி இலைகள், வெடாம்பழம், காய்கனிகள், வண்ணக்குடைகள், பூஜை பொருட்களையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதன் காரணமாக ஈரோடு கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது.


Next Story