ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்


ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை ஈரோட்டில் மும்முரமாக நடந்துவருகிறது.

ஈரோடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை ஈரோட்டில் மும்முரமாக நடந்துவருகிறது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். அதன்படி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனால் ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஈரோடு கொல்லம்பாளையம் நுழைவு வாயில் பகுதியிலும், பிரப்ரோட்டிலும் சாலையோரமாக விநாயகர் சிலை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பல வண்ணங்களில்...

இதுகுறித்து விநாயகர் சிலை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும்போது:-

விநாயகர் சிலைகள் திருச்சி, சேலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. சிலைகள் ½ அடி முதல் 2 அடி வரை விற்பனைக்கு உள்ளன. ½ அடி உள்ள விநாயகர் சிலைகளின் விலை ரூ.100-க்கும், 2 அடி உள்ள விநாயகர் சிலை ரூ.2 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வண்ணம் தீட்டப்பட்ட ½ அடி உள்ள விநாயகர் சிலையின் விலை ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து சிலைகளுமே மண்ணால் செய்யப்பட்டவை ஆகும். மேலும் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் உள்ளன. இதனால் மக்கள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலைகளின் விலை ரூ.10 மற்றும் ரூ.20 உயர்ந்து உள்ளது என்றார்.


Next Story