555 கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்


555 கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்
x

குடியாத்தத்தில் 555 கிலோ லட்டால் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

வேலூர்

குடியாத்தத்தில் 555 கிலோ லட்டால் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

லட்டு விநாயகர்

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் பல இடங்களில் பல்வேறு தோற்றத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் ஸ்ரீஜோதி லட்டு விநாயகர் கோவிலில் 555 கிலோ லட்டால் சிவன் தோற்றத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. லட்டு விநாயகரை காண காலை முதலே அப்பகுதி மற்றும் சுற்றுப்புற பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தரிசனம் செய்தனர். மாலையில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மன் கோவிலுக்கு லட்டு விநாயகர் ஊர்வலமாகச் சென்றார்.

சிறப்பு பூஜை

இதேபோல குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை அயல் தெரு மற்றும் சுங்கானி குப்புசாமி தெரு மத்தியில் உள்ள வலம்புரி சக்தி கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 501 கிலோ லட்டால் லட்சுமி தாயாருடன் அமைந்துள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. இங்கும் ஏராளமானோர் வந்து லட்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதி விநாயகர் கோவில்களில் காலை முதலே சிறப்பு அபிஷேகம், பூஜைகள், மகாதீப ஆராதனை நடைபெற்றது.


Next Story