விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

காவேரிப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கடந்த 31-ந் தேதி சிலைகள் வைத்து பொது மக்கள் சார்பிலும் இந்து முன்னணி சார்பிலும் வழிபாடு செய்து வந்தனர். இந்தநிலையில் காவேரிப்பாக்கத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரகு, சுந்தரம், நகர பொருளாளர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் நரேன் வரவேற்றார். கோட்ட செயலாளர் டி.வி.ராஜேஷ், மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பஜார் வீதி வழியாக சென்று சோமநாத ஈஸ்வர் கோவில் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதனையடுத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நெமிலி தாசில்தார் ரவி, பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமுருகன், இந்து முன்னணி, பா.ஜ.க. நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு முத்துக்கருப்பன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, முருகன், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், விநாயகமூர்த்தி, வாசுகி, சீனிவாசன், மங்கையர்க்கரசி, சசிக்குமார் மற்றும் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story