விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

பழனி, வேடசந்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனியில் சிவசேனா, இந்து மகாசபா மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் அர்ஜூன்சம்பத், ராம.ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். பாதவிநாயகர் கோவில் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் பஸ்நிலையம், காந்தி மார்க்கெட், ரதவீதிகள் வழியே சண்முகநதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதேபோல் வேடசந்தூரில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஆர்.எச்.காலனியில் இருந்து வடமதுரை சாலை, சாலைத்தெரு, கடைவீதி, பஸ்நிலையம், ஆத்துமேடு, சந்தைப்பேட்டை வழியே ஊர்வலமாக சென்று குடகனாற்றில் சிலைகள் கரைப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பிர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story