2-வது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலம்
குடியாத்தத்தில் நேற்று 2-வது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
குடியாத்தத்தில் 2-வது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர்சிலை ஊர்வலம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31-ந் தேதி நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டு தினம்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. சில இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மறுநாளே கரைக்கப்பட்டது. பெரும்பாலான விநாயகர் சிலைகளை நெல்லூர் பேட்டை ஏரியில் கரைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலின் அருகில் இருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமா சென்று நெல்லூர் பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஊர்வலம் நடைபெற்றது.
2-வது நாளாக
இரண்டாவது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8 அடி முதல் 15 அடி உயரத்தில் ஆன விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள், கேரள செண்டை மேளத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேற்று இரவு நெல்லூர் பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.