விநாயகர் சிலை ஊர்வலம்
வரம்பியம்.குடவாசலில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
வரம்பியம்.குடவாசலில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சிலை ஊர்வலம்
திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியத்தில் இந்து முன்னணி மற்றும் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில் 15-ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை பா.ஜ.க. திருவாரூர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் வரம்பியம் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், இந்து முன்னணி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
இதேபோல குடவாசலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. திருவாரூர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, முன்னாள் மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன், வக்கீல் பிரிவு செயலாளர் செந்தமிழ் செல்வன், விவசாய அணி செயலாளர் கோவி சந்துரு, வக்கீல் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி நிர்வாகி மதுசூதனன் வரவேற்றார்.
ஆற்றில் கரைப்பு
விநாயகர் ஊர்வலம் அகர ஓகை பாலத்தில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், திருக்குளம், வடக்கு வீதி, கீழ வீதி, அண்ணா தெற்கு வீதி வழியாக சென்று அகரஓகை சோழசூடாமணி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளர் கமாலுதீன் மற்றும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.