வெள்ளத்தில் எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலை


வெள்ளத்தில் எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலை
x

வெள்ளத்தில் விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டது

மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகள், குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுஒருபுறம் இருக்க இன்று(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் மேற்கண்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்ததால் நாதல் படுகை கிராமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரையும் பொருட்படுத்தாமல் விநாயகர் சிலைைய எடுத்துச் சென்றனர்.





Next Story