ரவுடி கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ரவுடி கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலூர்

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). இவரது மகனான ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட வழக்கில், இவர் முக்கிய சாட்சியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 20.8.2022 அன்று கூத்தப்பாக்கம் ரெயில்வே கெர்டர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குப்பங்குளம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த முருகன் மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் (22), 17 வயதுடைய 2 சிறுவர்கள், பழனிவேல் மகன் மதன் என்கிற மதன்குமார் (19), நவின்ராஜ் (20) ஆகிய 5 பேரும் கனகராஜை வழிமறித்து, அவரை மிரட்டி, கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

குண்டர் சட்டத்தில் கைது

இது பற்றி கனகராஜ் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜீவா, மதன் ஆகிய 2 பேர் மீதும் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு என 4 வழக்குகள் உள்ளன. இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் ஜீவா, மதன் ஆகிய 2 பேரையும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.


Next Story