கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 29 Aug 2022 7:33 PM GMT (Updated: 29 Aug 2022 7:36 PM GMT)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார்சத்திரம் அருகே கடந்த 12-ந் தேதி ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வரகனேரியை சேர்ந்த மிட்டாய்பாபு (வயது 28), கவியரசு (23), சந்தோஷ்குமார் (21) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில் மிட்டாய்பாபு மீது ஒரு கொலை வழக்கும், 3 கொலை முயற்சி வழக்குகளும், 6 அடிதடி வழக்குகளும், 3 பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்குகள் உள்பட 18 வழக்குகளும், கவியரசு மீது 1 கொலை முயற்சி வழக்கும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்குகள் உள்பட 5 வழக்குகளும், சந்தோஷ்குமார் மீது 8 அடிதடி வழக்குகளும் 3 திருட்டு வழக்குகள் உள்பட 15 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன. எனவே இவர்களது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மிட்டாய்பாபு, கவியரசு, சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Next Story